×

வெற்றி கனியை பறித்தது காங்கிரஸ்; கர்நாடக தேர்தலில் பாஜக அமைச்சர்கள் 15 பேர் தோல்வி.. தொண்டர்கள் வேதனை

பெங்களூரு:  பாஜக அமைச்சர்கள் 15 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட 192 இடங்களில் காங்கிரஸ் 117இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 117 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மேலும் 19 இடங்களில் முன்னிலை. பாஜக 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளநிலையில் 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதசார்பற்ற ஜனதாதளம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பாஜக அமைச்சர்கள் 15 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு

* முத்தோள் தொகுதியில் போட்டியிட்ட பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தோல்வியடைந்தார்.

* சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தோல்வியடைந்தார்.

* போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.ஸ்ரீ ராமுலு பெல்லாரி ஊரகம் தொகுதியில் தோல்வியடைந்தார்.

* பாகல்கோட் மாவட்டம் பீளகி தொகுதியில் போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி தோல்வியடைந்தார்.

* வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட வீட்டுவசதித் துறை அமைச்சர் வி.சோமண்ணா தோல்வியடைந்தார்.

* சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தோல்வியடைந்தார்.

* எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தோல்வியடைந்தார்.

* கிருஷ்ணராஜ்பேட் தொகுதியில் போட்டியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயணகவுடா தோல்வியடைந்தார்.

* ஒசகோட்டை தொகுதியில் போட்டியிட்ட சிறு,குறு தொழில் துறை அமைச்சர் எம்டிபி நாகராஜ் தோல்வியடைந்தார்.

* சிக்கநாயகனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மாதுசாமி தோல்வியடைந்தார்.

* ஹாவேரி மாவட்டம் ஹிரேகேரு தொகுதிகளில் போட்டியிட்ட விவசாயத்துறை அமைச்சர் பிசி பாட்டீல் தோல்வியடைந்தார்.

* திப் தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தோல்வியடைந்தார்.

* நாவல்குண்ட் தொகுதியில் போட்டியிட்ட துணி நூல் துறை அமைச்சர் சங்கர் முனனேகுப்பா தோல்வியடைந்தார்.

* தக்சின கன்னடா மாவட்டம் சிர்சி தொகுதிகளில் போட்டியிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தோல்வியடைந்தார்.

* ஹுப்ளி தார்வாட் மாவட்டம் நரகுந்தா தொகுதிகளில் போட்டியிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் தோல்வியடைந்தார்.

The post வெற்றி கனியை பறித்தது காங்கிரஸ்; கர்நாடக தேர்தலில் பாஜக அமைச்சர்கள் 15 பேர் தோல்வி.. தொண்டர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Karnataka ,elections ,Bengaluru ,Dinakaran ,
× RELATED இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக...